3.6.09

என் அருங்காட்சியகம்

அம்மா அடிக்கடி என்னை திட்டுவது இதற்காக தான் "வீடு முழுக்க குப்பைய சேர்த்து வைக்கறா.பழசானா தூக்கி போட வேண்டியது தானே" என்று....
அதெப்படி முடியும்... நடுத்தர குடும்பத்து பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் பொக்கிஷம் தான். அந்த பொருள் முதல் முறை நம் கைக்கு வந்ததும், நமக்கு கிடைக்கும் பெருமிதம், மகிழ்ச்சி... இன்றளவும் நினைத்தாலே இனிக்கிறது.. ஆனால் தற்பொழுது அதை விட அழகான, விலை அதிகமான பொருட்கள் வங்கினாலும் கிடைப்பதில்லை... அதனாலோ என்னவோ, நான் என் பொருட்கள் வீணானலும், வீசுவதில்லை..
இதோ என் அருங்காட்சியகத்தில் உள்ளவை (குப்பைத் தொட்டி-னு நீங்க நினைக்கிறது புரியுது)
அப்பா வாங்கி கொடுத்த ராஜா பொம்மை
பெரியம்மா வாங்கி கொடுத்த தோண்டி (குட்டி குடம்)
அப்பா வாங்கி கொடுத்த கைக்கடிகாரம்
பெரிய அண்ணா தந்த டெடி பேர்
மாமா வாங்கி தந்த பாவாடை
சின்ன அண்ணா முதன் முதலில் வாங்கி கொடுத்த ஹீரோ பேனா...
என்னோட ஸ்கூல் யூனிஃபாம்
ஜியாமென்ட்ரி பாக்ஸ்.
பல்லாங்குழி
முக்கியமானவங்க குடுத்த சக்கலேட் பேப்பர்
இப்படி இன்னும் நிறைய பொருள்கள் என் அறையை அலங்கறித்தவாறே(!!!) உள்ளன... அவைகளை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும், பழைய நினைவுகளை அசை போடும் சுகமே தனி தான்.

2.6.09

கனவு பலித்தது


தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......

குறிப்பு : பேசும்கவிதை போட்டிக்காக எழுதியது

1.6.09

நவரசம்

காதல்
--------
அன்பு, பாசத்தின் மறுவடிவம்..,
ஆயுள் வரை
தொடர்ந்தாலும்,
பருவ வயதில்
மட்டுமே பிரபலம்...

வீரம்
------
இறைவன் படைப்பில்
அனைத்து உயிர்களுக்கும்
பொதுவானது...
இதுவே,
தற்காப்பின் கருவானது...

சோகம்
---------
இழப்பின் வெளிப்பாடு.
தோல்வியின் வலி...
முயற்சியின் முட்டுக்கட்டை...

புன்னகை
------------
மனிதனை,
பிற உயிர்களினின்றும்,
பிரித்துக் காட்டும்...
பிற மனிதர்களினின்றும்
உயர்த்திக் காட்டும்....

வியப்பு
---------
புதிதாய் கண்டால்
பிறப்பது...


வெறுப்பு
-----------
ஆசையின் எதிராளி...
இது,
கோபத்தின் உச்சக்கட்டம்...

அச்சம்
---------
நன்மை செய்ய
இதனை,
ஏற்க வேண்டாம்...
தீமை நினைத்தாலே,
இதற்கு
அடி பணிய வேண்டும்...

சாந்தம்
---------
தக்க தருணத்தில்,
கடைபிடித்தல் நன்று...
இல்லையேல்
விளைவுகள் விபரீதம்..

கருணை
------------
இதைக் கொண்டால்,
மனிதன்,
இறைவனின் மறு உருவம்