20.5.09

வழி சொல்லுங்கள்...


வீட்டில் நான் போட்ட
சட்டத்தை மாற்றினாள் ....
பொறுத்துக் கொண்டேன்...
என் உடைமைகளை
அபகரித்தாள் ....
அமைதி காத்தேன் ....
கோபம் கொண்ட
போதெல்லாம் அடித்தாள்....
தாங்கிக் கொண்டேன்.....
அவள் தவறிழைத்த போதெல்லாம்
'அவள் உன்னை மாதிரி' என
அனைவரும் என்னை
வசை பாடினார்கள்
வாங்கிக் கொண்டேன்...

என் கட்டுப்பாட்டில்
இருந்த வீட்டை
அவள் கட்டுப்பாட்டிற்கு
மாற்றினாள்...
மன்னித்து விட்டேன் ....
என் பொறுமைக்கெல்லாம்
முற்றுப் புள்ளி வைக்கும் விதம்,
இன்று என்னையே அடக்கி,
"அத்தை!!! இனி நான் சொல்றத கேளு"
என்கிறாள் என் அண்ணன் மகள்.
அவள் ஆட்டத்தை அடக்க,
என் வீட்டாட்சியை மீட்க
வழி சொல்லுங்கள்...

9 comments:

நையாண்டி நைனா said...

அந்த குட்டி பாப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள்.

Muniappan Pakkangal said...

Is it disturbing? you are lying.Ungalukku annan mahal,enakku thangai mahangal.Onnum seiya mudiyaathu.

sankarkumar said...

good poem..
cinemavukku elutha viruppama..?
sankarkumar

Muniappan Pakkangal said...

Ungalukku annan mahal,enakku thangai mahangal.Varutham pola thondrum santhoshangal.Enjoy.

Muniappan Pakkangal said...

Nee velia po sollaliya,i have that experience.Ithu suhamaana vilaiyaattu.Ungalukku annan mahal enakku thangai mahangal.Enjoy.

Muniappan Pakkangal said...

My comment has not come,so repeated tries.

தமிழ்ப்பிரியா said...

Thank u muniappan sir!!!
நிஜமாவே சுகமான விளையாட்டு தான் !!!
But now she is in Bangalore...
I miss her a lot.

தமிழ்ப்பிரியா said...

Thank u Sankar sir...
தங்கள் முதல் வருகைக்கு நன்றி...
நிஜமா தான் சொல்றீங்களா?
சினிமாவுக்கு எழுத ஆசை-ஆ தான் இருக்கு...
வாய்ப்பு கிடைச்சா எழுதுவேன்..

தமிழ்ப்பிரியா said...

thank u நையாண்டி நைனா!!!
For ur visit..

Post a Comment