3.6.09

என் அருங்காட்சியகம்

அம்மா அடிக்கடி என்னை திட்டுவது இதற்காக தான் "வீடு முழுக்க குப்பைய சேர்த்து வைக்கறா.பழசானா தூக்கி போட வேண்டியது தானே" என்று....
அதெப்படி முடியும்... நடுத்தர குடும்பத்து பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் பொக்கிஷம் தான். அந்த பொருள் முதல் முறை நம் கைக்கு வந்ததும், நமக்கு கிடைக்கும் பெருமிதம், மகிழ்ச்சி... இன்றளவும் நினைத்தாலே இனிக்கிறது.. ஆனால் தற்பொழுது அதை விட அழகான, விலை அதிகமான பொருட்கள் வங்கினாலும் கிடைப்பதில்லை... அதனாலோ என்னவோ, நான் என் பொருட்கள் வீணானலும், வீசுவதில்லை..
இதோ என் அருங்காட்சியகத்தில் உள்ளவை (குப்பைத் தொட்டி-னு நீங்க நினைக்கிறது புரியுது)
அப்பா வாங்கி கொடுத்த ராஜா பொம்மை
பெரியம்மா வாங்கி கொடுத்த தோண்டி (குட்டி குடம்)
அப்பா வாங்கி கொடுத்த கைக்கடிகாரம்
பெரிய அண்ணா தந்த டெடி பேர்
மாமா வாங்கி தந்த பாவாடை
சின்ன அண்ணா முதன் முதலில் வாங்கி கொடுத்த ஹீரோ பேனா...
என்னோட ஸ்கூல் யூனிஃபாம்
ஜியாமென்ட்ரி பாக்ஸ்.
பல்லாங்குழி
முக்கியமானவங்க குடுத்த சக்கலேட் பேப்பர்
இப்படி இன்னும் நிறைய பொருள்கள் என் அறையை அலங்கறித்தவாறே(!!!) உள்ளன... அவைகளை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும், பழைய நினைவுகளை அசை போடும் சுகமே தனி தான்.

5 comments:

Muniappan Pakkangal said...

Pazhasa thookki poda mudiyumaa ? Nalla pokkisha ninaivuhal Tamilpriya.

Muniappan Pakkangal said...

Pokkishangal are an asset to keep the mind charged up Tamilpriya.u r really great.

butterfly Surya said...

சில பேருக்கு அது குப்பை தொட்டியாய் தெரிந்தாலும் பழைய நினைவுகளின் பொக்கிஷமாகவும் இருக்கும்.

உறவுகளையே use & throw நினைக்கும் இந்த அதி வேக யுகத்தில் உங்கள் அருங்காட்சியகம் அருமை.

வாழ்த்துகள்..

தமிழ்ப்பிரியா said...

நன்றி முனியப்பன் சார்

தமிழ்ப்பிரியா said...

நன்றி வண்ணத்துபூச்சியார்...

Post a Comment