22.5.09

சாதிக்கப் பிறந்தேன்...

ஆறாத வடுவாய்
நேற்றைய தோல்விகள்...
முட்களாய் குத்தும்
உறவுகளின் இழிப்பேச்சுகள் ...
முயற்சியின் முட்டுக்கட்டையாக
தோல்வியின் அவமானம்....
ரணங்களை வார்க்கிறேன்
வார்த்தைகளாக...
மலர்ந்தது,
கவிதை மட்டுமல்ல...
தன்னம்பிக்கையும் தான்...
நம்பிக்கையால்
தகர்த்தெறியப்பட்டது
முட்டுக்கட்டைகள்...
இதில் வெளிப்பட்டது
விடாமுயற்சி...
முயற்சியின் பலன்தான்
இன்றைய சாதனை...
இது,
என் கவிதையின் வெற்றி...
கேட்டேன் அதன்,
வெற்றியின் ரகசியத்தை...
என் கவிதை சொன்னது,
" நான் சாதிக்க பிறந்தேன்" என்று...

8 comments:

கபா said...

உங்களுக்கு
மட்டுமல்ல
மற்றப்
பென்களுக்கும்
கொடுக்கப்படும்
தன்நம்பிக்கை

உங்கள் கவிதை!

வாழ்த்துக்கள்...நண்பி

தமிழ்ப்பிரியா said...

நன்றி கபா,
தங்கள் முதல் வருகைக்கும்,
வாழ்த்துக்களுக்கும்...

Muniappan Pakkangal said...

Ranangalai vaarkiren vaarthaihalaaha-beautiful self confidence kavithai.

Muniappan Pakkangal said...

Kavithaikkum self confidence kavithaiyaa?Aathaadi.

Muniappan Pakkangal said...

Unga postukku comment, poda sathikka pirakkavendi irukku.This is my 3 rd try.

தமிழ்ப்பிரியா said...
This comment has been removed by the author.
தமிழ்ப்பிரியா said...

Thank u Muniappan sir 4 ur contineous encouragement. if u send any comment i have to moderate it. then only it ll be published....

கவிதை காதலன் said...

கவிதைகள்'ல ஒரு வைராக்கியம் தெரியுது. Keep it up

Post a Comment