
இன்பத்தில்,
என்னை அலங்கரித்தாய் ....
துயரத்தில்,
என்னை செதுக்கினாய் ....
கோபத்தில்
என்னை காயப்படுத்தினாய் ...
யாரையோ காதலித்து,
என்னை கற்பமாக்கினாய் ....
சமூகப் பற்றுற்றபோது,
என்னை ஆயுதமாக்கினாய்....
ஆக,
உன் உணர்ச்சிகளுக்கு
நான் பலியானேன்...
என்னை,
உன் திறமை என்றாய்...
உன் படைப்பு என்றாய்...
உன் எழுத்து என்றாய் ...
உன் உணர்வின் வெளிப்பாடு என்றாய்...
உண்மையில்,
உன் அடிமை நானானேன்...
யாரென்று கேட்கிறாயா?
சொல்கிறேன் கேள்..
தாகூரின் மடியிலே தவழ்ந்து,
பாரதியின் வார்த்தையில் விளையாடி,
தாசனின் பேனாவில் இளைப்பாறினேன்....
இன்று,
உன்னில் அகப்பட்டு,
"கவிதை" என்றானேன்....
என்ன செய்தாய்
என்னைக் கொண்டு?
வெற்று காகிதத்தில்
எனைப் படைத்து,
காகிதத்திற்கு மட்டுமே
உயிர் தந்தாய்...
ஆனால் நானோ ,
பொட்டலமாகவோ,
துடைக்கவோ
பயன்பட்டு,
நடைபிணமாய் திரிகின்றேன்...
படைத்த என்னை
எப்போது உயிர்பிப்பாய்?
உன் சொல்லாற்றல், எழுத்தாற்றல்
என்னைப் படைக்கும்...
உன் செயலாற்றல் மட்டுமே
எனக்கு உயிர் கொடுக்கும்....
அப்போது தான்
நான் உயிர்பெற்று,
உன் சிந்தனையின் வடிவமாய்,
உன் ஊக்கத்தின் தூண்டுகோலாய்,
உன் வெற்றியின் காரணமாய்,
உனக்குப் பின்னும்,
இவ்வுலகுள்ள மட்டும்
உன் பெயர் தாங்கி
அழியாதிருப்பேன்...
உயிர் கொடு....
உன் வெற்றியை பறைசாற்ற,
தோல்வியில் உன்னை ஊக்கப்படுத்த,
காதலிக்கு விருந்தாக்க,
சமூகத்தை மேம்படுத்த,
உயிர் கொடு.... எனக்கு
உயிர் கொடு...
18 comments:
அருமையான பேச்சு... லாவகமான வீச்சு...
:)
நன்றி நைனா...
நன்றி நேசமித்ரன் ...
nice
//இன்பத்தில்,
என்னை அலங்கரித்தாய் ....
துயரத்தில்,
என்னை செதுக்கினாய் ....
கோபத்தில்
என்னை காயப்படுத்தினாய் ...
யாரையோ காதலித்து,
என்னை கற்பமாக்கினாய் ....
சமூகப் பற்றுற்றபோது,
என்னை ஆயுதமாக்கினாய்....//
அட்டகாசம்.
நன்றி ஐந்திணை
நன்றி துபாய் ராஜா
//இன்பத்தில்,
என்னை அலங்கரித்தாய் ....
துயரத்தில்,
என்னை செதுக்கினாய் ....
கோபத்தில்
என்னை காயப்படுத்தினாய் ...
யாரையோ காதலித்து,
என்னை கற்பமாக்கினாய் ....
சமூகப் பற்றுற்றபோது,
என்னை ஆயுதமாக்கினாய்....//
ஆரம்பமே அமர்க்களம். கவிதை பற்றிய அருமையான கவிதை.
நன்றி உழவன் ....
பின்னிட்டீங்க போங்க...நல்லா இருக்குங்க....
நன்றி Arangaperumal !!!
//உன் சொல்லாற்றல், எழுத்தாற்றல்
என்னைப் படைக்கும்...
உன் செயலாற்றல் மட்டுமே
எனக்கு உயிர் கொடுக்கும்....//
சூப்பர்ப் உண்மையான வரிகள்
நன்றி வசந்த்!!!
//தாகூரின் மடியிலே தவழ்ந்து,
பாரதியின் வார்த்தையில் விளையாடி,
தாசனின் பேனாவில் இளைப்பாறினேன்....//
கவிதை வரிகள் அருமை
நன்றி குரும்பையூர் மூர்த்தி
ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
அதற்கான முகவரி : www.findindia.net
அற்புதம்
அருமை...............
என்னவொரு வார்த்தைகள்
Post a Comment