31.7.09

முதல் அலுவலகம்

13579 -இது
என் அடையாள எண்...
இன்று வரை மட்டுமே...

நான் பயன்படுத்திய
கணிப்பொறியும், இருக்கையும்
இனி யாருக்கோ?
ஆனால்,
என் அலுவலகம் உள்ள வரை,
இந்த அடையாள எண்
குறிப்பது என்னை மட்டுமே...

குடும்பம், நட்பு என்று
வீட்டுப் பறவையாக
இருந்த என்னை,
வெளி உலகை
காண்பித்தது,
இவ்வலுவலகம் தான்...

தாமதம் செய்யாதே....
பொறுமை பழகு....
கோபம் கொள்ளாதே....
பிறருடன் அளவாக பேசு...
எச்சரிக்கையாய் இரு....
இது போன்ற,
இன்னும் பல ஆலோசனைகளை,
செவிவழி கேட்டிருந்தாலும்,
அனுபவப்பட்டு கற்றது,
என் அலுவலகத்தில் தான்...

எனக்கு முதல்
வேலை வாய்ப்பளித்த,
என் அலுவலகமே!!!
இன்றுடன் உன்னை பிரிகின்றேன்...
முதல் பள்ளி,
முதல் வண்டி,
வரிசையில்,
இன்று நீயும் - என்
"முதல் அலுவலகம்"
என் உயிர் உள்ள வரை...

19 comments:

நையாண்டி நைனா said...

ஆம்... யாவருக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

தமிழ்ப்பிரியா said...

ஆம் நைனா...

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்போ கம்பெணீ மாற போரீங்களா?

SK said...

ம்ம்ம்ம்ம்

எத்தனை முதல் .. :)

தமிழ்ப்பிரியா said...

இல்லை குறை ஒன்றும் இல்லை !!! .. குடும்ப இஸ்திரி ஆக போறேன்

தமிழ்ப்பிரியா said...

அதெல்லாம் எண்ண முடியாது SK...

SK said...

தப்பு தப்பு.. எண்ணி சொல்லுங்க :-)

நம்மூர் போல இருக்கு.. இன்னும் அங்க தான் இருக்கீங்களா??

தமிழ்ப்பிரியா said...

வணக்கம்ங்கண்ணா... நம்மூரா நீங்க???

SK said...

ஆமாங் அம்மணி .. ஆனா இல்லீங்.

தமிழ்ப்பிரியா said...

புரியுது.. ஆனா.. புரியல.........

SK said...

ஆமா ஆனா இப்போ நான் அங்கே இல்லை அப்படின்னு அர்த்தம் அம்மணி. இம்புட்டு பெரிய பேச்சாளருக்கு இது கூட புரியலைனா எப்படிங்கோ ??

தமிழ்ப்பிரியா said...

சரிங்கண்ணா.........

குறை ஒன்றும் இல்லை !!! said...

//இல்லை குறை ஒன்றும் இல்லை !!! .. குடும்ப இஸ்திரி ஆக போறேன்///

அப்படியா? வாழ்த்துக்கள்.. ஹீம்ம்ம்..யார் அந்த அப்பாவியோ!!!

தமிழ்ப்பிரியா said...

அச்சோ! அப்பாவி ஏற்கனவே மாட்டிட்டார்.. நான் சொன்னது,குடும்ப இஸ்திரி -> வேலையை விட்டு வீட்டில் இருப்பதை...

Arangaperumal said...

"முதல்" - எத்தனை முதல்?எத்தனை வந்தாலும் மறக்கமுடியாது.. முதல் என்றும் முதல்தான். முதல் வார்த்தை,முதல் முத்தம்(மனைவிக்கு) அசைபோட மகிழ்வு தருபவை.. இப்போதும் எனக்கும் என் மனைவிக்கும் சண்டை என்றால் நான் போடுவது,கேட்பது முதல் படலைத்தான்(தவமின்றி கிடைத்தவரமே...., முதன்முதலில் நான் பேச முனைந்தபோது "சன்ம்யூஸிக்கில் ஒலி(ளி)பரப்பானது.

நட்புடன் ஜமால் said...

இப்ப கிடைச்சிருக்கும் வேலையில் ரிட்டையர்மெண்டே கிடையாது, சம்பளமும் இல்லை ரெஷஷனும் இல்லை

ஆனால் சந்தோஷம் அது எப்போதும் இருக்கும் ...

" உழவன் " " Uzhavan " said...

//முதல் பள்ளி,
முதல் வண்டி,
வரிசையில்,
இன்று நீயும் - என்
"முதல் அலுவலகம்"
என் உயிர் உள்ள வரை... //

பெருமையாக உள்ளது.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//வேலையை விட்டு வீட்டில் இருப்பதை...//

அப்போ முழு நேரமும் வீட்டிலேயா? பாவம் அந்த மனுசன்( ஒரு ஆம்பில மனசு இன்னொரு ஆம்பிளைக்கு தான் தெரியும்!!)

Muniappan Pakkangal said...

First is the best Tamilpriya,nice tribute.

Post a Comment