28.7.09

அன்புத் தோழி !!!


அன்புத் தோழி கோவில்பட்டி வீரலட்சுமி!!!
பள்ளியில் முதல் பெஞ்சில் இருந்த என்னை
கடைசி பெஞ்ச்சுக்கு பாதை காட்டிய -நீ
ஒரு வழிகாட்டி...

கல்லூரிக்குள் இருந்த என்னை
சினிமா தியேட்டர் செல்ல,
கல்லூரி சுவர் ஏறி
குதிக்க உதவிய - நீ
ஒரு ஏணி...

கணிணி கற்ற என்னை
ஊர் சுற்ற கற்றுக் கொடுத்த - நீ
ஒரு ஆசான்...

தலைப் பின்னலுடன் இருந்த என்னை
தலை விரி கோலத்துடன்,
அலைய வைத்த - நீ

ஒரு அழகுக்கலை நிபுணி...
நூலகத்தில் சதா
கருத்துக்களை விழுங்கும் என்னை
கேண்டீனில் சதா மசால் தோசை
விழுங்க செய்த - நீ
ஒரு அன்னபூரணி...

வகுப்பில் அவுட்ஸ்டேண்டிங் - ஆக
இருந்த என்னை
வகுப்பை விட்டு
அவுட் ஸ்டேண்டிங் ஆக்கிய - நீ
ஒரு உத்தம புத்திரி...

என்றும் மறக்க முடியாது
நாம் காப்பி அடிக்க நீ
வைத்திருக்கும் பிட்டு பேப்பரும்
மாட்டினால் நீ போடும் போலி மயக்கமும்...

இப்படி மேலும் சொல்வேன்
உன் அருமை பெருமைகளை(!!!)...
காலம் பல சென்றாலும்
நம் சாதனைகளை(!!!!!) இன்றும்
நம் ஆசிரியர்கள் பேச (திட்ட) தான் செய்கிறார்கள்...

நம் அரசியலில் இதெல்லாம்
சாதாரணம் என்றாலும் இவை
இன்றும் என் மனதில்
பதிந்துள்ளன பசுமரத்தாணியாய்...

இப்படிக்கு
உன் அன்புத் தோழி

7 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா லேடி ரவுடிஸ் டோய்..........

நட்புடன் ஜமால் said...

உங்களை

நீங்களாக இருக்க விடாமல் செய்யும் திறமை அவருக்கு இருந்திருக்கின்றது

அவரை

உங்களை போன்ற நல்லவராகவோ / வல்லவராகவோ மாற்றும் திறமை உங்களிடம் இல்லாமல் போய்விட்டதே~! ...

தமிழ்ப்பிரியா said...

வசந்த், இப்புடி public-ஆ சொல்லப்படாது.........

தமிழ்ப்பிரியா said...

ஜமால்,அவங்க பண்ணத மட்டும் தான் சொல்லி இருக்கேன். நான் பண்ணத எப்புடி நானே சொல்லுவேன்.

நட்புடன் ஜமால் said...

தமிழ்ப்பிரியா said...

ஜமால்,அவங்க பண்ணத மட்டும் தான் சொல்லி இருக்கேன். நான் பண்ணத எப்புடி நானே சொல்லுவேன்.
]]

ஹா ஹா ஹா

நீங்க சொல்லாட்டி எங்களுக்கு தெரியாது

நிச்சியமா அவங்க வந்து சொல்ல மாட்டாங்க.


வருத்தமா எடுத்துக்காதீங்க. வித்தியாசமாக சொல்லலாமேன்னு தான் அப்படி கருத்தினேன்.

தமிழ்ப்பிரியா said...

சரி ஜமால், உங்களுக்காக அவங்கள ஒரு நாள் guest writer - ஆ வர சொல்றேன்

நட்புடன் ஜமால் said...

மிக்க நன்றிங்க

எமது கருத்தை மதித்தமைக்கு.

Post a Comment