29.7.09

பிரிவுஅங்கோர் மலர்
தென்றலின் தோளில் சாய்கின்றது...
தேடலின் பார்வையா? இல்லை
பிரிதலின் தேடலா?
அன்பினில் அரவணைப்பில்
இத்தனை பாரமா பிரிவு?

இமயங்கள் இதயத்தை இடித்தது...
இறைவா... வேதனையின் வடிவு இதுவோ?
இயற்கையின் படைப்பில்
இதுதான் வலியதோ?
வலியதைப் படைத்தவனே!
வலியையும் ஏன் படைத்தாய்?

கண்ணீரின் சுமை
கனலின் புழுவாம்
அறிந்தும் அறியாதவனோ
தெரிந்தும் ஏன் பிரிக்கின்றாய்??

6 comments:

நையாண்டி நைனா said...

nalla irukkunga.

தமிழ்ப்பிரியா said...

நன்றி நைனா

நேசமித்ரன் said...

கவிதை நல்லா இருக்கு

நட்புடன் ஜமால் said...

என் குழந்தையை ஊரில் விட்டு வந்து
இங்கு நான் அழுது கொண்டிருக்கேன்

இந்த வரிகள்
என் கண்ணீரை
மொழி பெயர்த்தது போல் உள்ளது ...

தமிழ்ப்பிரியா said...

நன்றி நேசமித்ரன்

தமிழ்ப்பிரியா said...

குழந்தைகளின் பிரிவு கொடுமை தான் ஜமால்....... உங்கள் வேதனை புரிகின்றது ....

Post a Comment