10.7.09

காஃப் லவ்

என் திருமணம் நான்கு வருட காதல், ஒரு வருட போராட்டத்திற்கு பின் கடந்த ஜுன் 14 2009 அன்று எங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள்
முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்தது.
கடந்த 5 வருடத்தில் நான் அவருக்கு பல கவிதைகள் எழுதி
கொடுத்துள்ளேன். ஆனால் அவரிடம் இருந்து காதல் வார்த்தைகள் கூட கிடைத்ததில்லை. சரி அவரிடம் எந்த திறமையும் அல்ல என்று நினைத்துக் கொள்வேன்.
திருமணத்திற்கு பின் ஒரு பேப்பர் கற்றையை கொடுத்து படிக்க சொன்னார்.அதில் இருந்தவை அனைத்தும் கவிதைகள். அதுவும் காதல் கவிதைகள். என்னால் நம்பவே முடியவில்லை.அனைத்தையும் படித்துவிட்டு அவரிடம் கேட்டேன். "என்ன நினச்சு இவ்ளோ அழகா எழுதிருக்கீங்க. இதுல ஒரு கவிதைய கூட எனக்கு ஏன் கொடுக்கல" என்று கேட்டேன்.அதற்கு அவர் பதில் என்ன தெரியுமா???
"உன்ன நினச்சு கவித எழுதிட்டு இருந்தா பொழப்ப யார் பார்க்குறது" என்று பொறுப்பான் ஆண்மகனாக பேசினார்.உள்ளூர கோபம் இருந்தாலும், அவர் கடமை உணர்ச்சியை நினைத்து பெருமை பட்டுக் கொண்டேன். சரி. எப்பொழுதோ கற்பனையாக நினைத்து எழுதியிருப்பார் என்று விட்டு விட்டேன். நான் கவிதைகளை வாசித்துக் கொண்டு இருந்தேன்.சிறிது நேரம்
கழித்து அவரும் ஒரு கவிதையை படித்து விட்டு என்ன சொன்னார் பாருங்களேன்.

"இதெல்லாம் once upon a time அவள நினச்சு எழுதுனது... நினச்சாலே எவ்ளோ சுகமா இருக்குது" என்று விட்டத்தைப் பார்த்தார். "யார் அவள்" என்ற கேள்வியுடன் என் கண்களில் கங்கை பெருக்கெடுத்தது... உடனே அவர் பதற்றத்துடன்....."அச்சோ நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.... அது calf love டா." என்று தொடங்கி கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், மிக அழகாக ஒரு 14 வயது வாலிபனுக்கே உரிய காதல் உள்ளத்துடன் இருந்தது.பிறகு அவரிடம் கேட்டேன். " இவ்ளோ சின்சியரா லவ் பண்ணி இருக்கீங்க, கொஞ்சம் முயற்சி பண்ணி அவங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாமே" . அதற்கு அவர் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. "நான் அவள லவ் பண்ணப்ப எனக்கு 14 வயசு. அவள பார்த்தேன் அழகா இருந்தா(நான் இடை மறித்து, அப்ப நான் அழகா இல்லயா என்றேன். உடனே அவர், சின்ன வயசுல கழுத குட்டி கூட குதிர மாதிரி அழகா இருக்கும் என்று நக்கலடித்தார்.நான் கப்சிப்). அடிக்கடி அவள பார்க்கனும்னு தோணுச்சு... பேசனும்னு தோணுச்சு. பட் ப்ரப்போஸ் பண்ணும் போது அவ கிட்ட எனக்கோ, என்கிட்ட அவளுக்கோ எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.யாரும் பார்த்துடுவாங்களோ- னு பயந்து பயந்து பேசுவோம். அதெல்லாம் த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் டா. அவள பார்த்தது ஒரு 3 மாசம். பேசுனது ஒரு 4 மாசம். தட்ஸ் ஆல். அதுக்கு அப்பறம் கொஞ்ச நாள் சண்ட....கொஞ்ச நாள் சமாதானம்.பட் நிறைய விஷயம் எங்களுக்கு ஒத்து போகாது. அப்பறம் ரெண்டு பேருமே டென்த் முடிச்சோம். தென் அவ வேற ஸ்கூல் போய்ட்டா. அப்பப மீட் பண்ணும் போதும் சண்ட தான். என்ன நினச்சானு தெரில. பார்க்குறத குறச்சுக்கிட்டா... பேசுறத குறச்சுக்கிட்டா...... தென் சுத்தமா அவாய்ட் பண்ணா.... நானும் நிறைய தடவ கான்டக்ட் பண்ண ட்ரை பண்ணேன்... அவாய்ட் பண்ணிட்டே இருந்தா.அப்பறம் நானே தாவணி போனா சல்வார் கமிஸ் உள்ளதடான்னு மனச தேத்திக்கிட்டேன்."
உடனே நான் "அப்ப அந்த சல்வார் கமீஸ் நான் தானா?... என்னையும் இப்டி தான் விளையாட்டுக்கு லவ் பண்ணீங்களா?" என்றேன்...அதற்கு அவர் "அட லூசு.... உன் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணும் போது... உன்ன பத்தி எனக்கு தெரியும். என்ன பத்தி உனக்கு தெரியும். எனக்கு பிடிச்ச மாதிரி நீ இருந்த.... உனக்காக எத வேணும்னாலும் sacrifice பண்ணலாம்னு தோணுச்சு. because that much i admired your character. அப்பறம் தான் உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணேன்.உனக்கும் என்ன பிடிச்சதுனால தான ஓகெ சொன்ன " என்று பொறுப்பாக பதில் அளித்தார்.
அவர் கூறியது போல எங்கள் இருவர் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கினார்....எங்கள் திருமணம் 75% அவர் ஈடுபாடு மற்றும் உழைப்பினாலே நடந்தது....இறுதியாக அவர் "காஃப் லவ், காஃப் லவ் தான்" என்று முடித்தார்....

10 comments:

நட்புடன் ஜமால் said...

பலர் வாழ்வில் இப்படி ஒரு காதல் இருக்கும் போல

மிக அழகாக இருந்தது படிக்கையில் மென்மையாக உணர்ந்தேன் ...


மிக்க நன்றி - இப்படி என்னை உணர செய்ததற்கு ...

S.A. நவாஸுதீன் said...

முதலில், காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

எதார்த்தமான வாழ்க்கையின் சந்தோசங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமும் முதிர்ச்சியும் கொண்ட அன்பான கணவர் கிடைத்திருக்கிறார் உங்களுக்கு. வாழ்த்துக்கள். நீங்கள் கூறிய அவரின் செயல்பாடுகளில் இருந்து தெரிகிறது அவர் மிக நல்ல காதலராக மட்டுமில்லை, மிகச்சிறந்த கணவராகவும் திகழ்வார்.

sakthi said...

"யார் அவள்" என்ற கேள்வியுடன் என் கண்களில் கங்கை பெருக்கெடுத்தது...

பின்னே கங்கை வராதா என்ன

sakthi said...

என் திருமணம் நான்கு வருட காதல், ஒரு வருட போராட்டத்திற்கு பின் கடந்த ஜுன் 14 2009 அன்று எங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள்
முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்தது.


வாழ்த்துக்கள்

Muniappan Pakkangal said...

Nice Veettukaarar Tamilpriya,avarai ketathaa sollunga.Nice info on calf love.

தமிழ்ப்பிரியா said...

நன்றி ஜமால்...உங்களுக்கும் அனுபவம் இருக்குதா?

தமிழ்ப்பிரியா said...

நன்றி நவாஸுதீன்.தாங்கள் குறிப்பிட்டது மிகச் சரியே....

தமிழ்ப்பிரியா said...

நன்றி சக்தி.... தங்கள் வாழ்த்துக்களுக்கு....

தமிழ்ப்பிரியா said...

நிச்சயம் சொல்றேன் முனியப்பன் சார்....

Post a Comment