28.7.09

கொறிக்க மட்டும்

CANDY CONDUCTOR
நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தில் செல்ல நேர்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, பேருந்தில் அதிக நெரிசல்.என்னிடம் சரியான சில்லரை இல்லை.
கண்டக்டரிடம் திட்டு வாங்க வேண்டுமே என்று பயந்து 10 ரூபாயை நீட்டு ஒரு 4.50 என்றேன். அவர் ,"கூட்டத்த பாரும்மா.. சில்லரையா வெச்சுக்க வேண்டியது தானே " என்று டிக்கட்டையும்,5 ரூபாயயும் கொடுத்தார்... உடனே நான், "50 பைசா பரவால்ல" என்றேன்...உடனே அவர் "அதுவும் காசு தானே" என்று 50 பைசா மதிப்புள்ள சாக்கலேட் ஒன்றை கொடுத்து, "50 காசு சில்லர சரியா கிடைக்கிறதுல்ல... அதனால்ல தான்" என்றார். எனக்கு மட்டமல்ல...அனைவருக்கும் 50 பைசாவிற்கு பதிலாக சாக்கலேட் தான் கொடுத்தார். அனைவருக்கும் சிரிப்பு. ஒரு வயதான் பாட்டி அவரை நேரடியாகவே பாராட்டி விட்டார்.ஒரு கல்லூர் பெண் அவள் தோழியிடம், "ஏய், இனி இவர் candy conductor டி" என்று சிரித்துக் கொண்டாள்...

3 comments:

kgjawarlal said...

decant கண்டக்டராக இல்லாமல் decent கண்டக்டராக இருக்கிறார்!

http://kgjawarlal.wordpress.com

தமிழ்ப்பிரியா said...

நன்றி kgjawarlal சார்... தங்கள் முதல் வருகைக்கு...

குறை ஒன்றும் இல்லை !!! said...

இப்படி பட்ட நடத்துனர் எந்த வழித்தடத்தில் வேலை செய்கிறார்?

Post a Comment